சனி + ஞாயிறு விடுமுறை.. பிரபல ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம்-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் எனும் International Business Machines Corporation அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் நம் நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ளது.

இந்நிலையில் கேரளா மாநிலம் கொச்சியில் செயல்படும் ஐபிஎம் நிறுவனதுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி சாப்ட்வேர் என்ஜினியரிங் பிரிவில் பேக்எண்ட் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஜாவா ப்ரோகிராமிங் (Java Programming)மற்றும் பைத்தான் (Python) தெரிந்து வைத்திருக்க வேண்டும். SQL/NoSQL database புரிந்து வைத்திருக்க வேண்டும். RESTAPI, HDFS, SPark உள்ளிட்டவற்றின் அடிப்படை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
‛‛வொர்க் ஃப்ரம் ஹோம்’’.. வீட்டில் இருந்தே வேலை.. அழைக்கும் முன்னணி ஐடி நிறுவனம்
மேலும் ஐபிஎம்மின் பல்வேறு இன்டனல் டேட்டாபேசஸ், Docker containger Development, Kubernetes Container Orchestration உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கும் மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது.இதனால் விருப்பம் உள்ளவர்கள் IBM நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. +2, டிகிரி முடித்தவர்களுக்கு அமேசானில் அசத்தலான வேலை.. மிஸ் பண்ணாதீங்க
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்படும். ஏதாவது அவசர பணிகள் இருப்பின் மட்டுமே இந்த 2 நாட்களும் பணியமர்த்தப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click here












Click it and Unblock the Notifications