IBPS bank job: பொதுத்துறை வங்கிகளில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை! 2 நாள் தான் டைம் இருக்கு! அப்ளை பண்ண மறந்துடாதீங்க
சென்னை: கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கி (IBPS bank job) என பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10,277 Customer Service Associates (Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில், தமிழகத்தில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
நம் நாட்டில் அரசு வேலையில் சேர வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியமாக உள்ளது. இதற்காக கல்லூரி கால கட்டத்தில் இருந்தே தேர்வர்கள் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராவதை பார்க்க முடியும். அரசு பணிக்காக தயாராகும் தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தேர்வுகளில் ஒன்றாக ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிகளுக்கான தேர்வு ஆகும்.

ஏனெனில் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றால் வங்கியில் கிளர்க் பணி கிடைக்கும். பொதுத்துறை வங்கிகளில் வேலை என்பதால் பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம் உள்ளிட்டவை கிடைக்கும். இதனால், தேர்வர்கள் அரசு பொதுத்துறை வங்கிகளில் சேர பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில், ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐபிபிஎஸ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைய உள்ளது.. இது குறித்த நினைவூட்டலை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. பாங்க் ஆஃப் பரோடா
2. பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா
3. கனரா வங்கி
4. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
5. யூகோ வங்கி
6. பாங்க் ஆஃப் இந்தியா
7. சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
8. பஞ்சாப் நேஷனல் வங்கி
9. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
10. பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா
11. இந்தியன் வங்கி
12. பஞ்சாப் & சிந்து வங்கி
உள்ளிட்ட வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 10,277 Customer Service Associates (Clerk) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிவிரில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் மாநில வாரியாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு:
வயது வரம்பை பொருத்தவரை 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.08.1997 முன்பாகவோ 01.08.2005 -க்கு பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உண்டு.சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.24,050 - ரூ.64,480 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை:
முதல் நிலை தேர்வு மற்றும் மெயின் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, தரும்புரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர் கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர்,வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் முதல் நிலை தேர்வு நடைபெறும்.
கிளர்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 21 ஆம் தேதி தான் கடைசி நாளாகும். எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். கடைசி நாள் வரை காத்திராமல் உடனே விண்ணப்பியுங்கள்.












Click it and Unblock the Notifications