வங்கிகளில் வேலை! தேர்வர்கள் எதிர்பார்த்த மெகா அறிவிப்பு வந்தது! அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: ஐபிபிஎஸ் நடத்தும் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. போட்டி தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தேர்வு அறிவிப்புகளில் ஒன்றாக ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிகளுக்கான தேர்வு உள்ளது. இன்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
எஸ்.பி.ஐ வங்கியை தவிர்த்து நாட்டில் உள்ள இதர பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி , சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி, பேங்க் ஆப் மகராஷ்டிரா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் நிரப்பி வருகிறது.

கிளார்க் பணியிடங்கள்: பணி பாதுகாப்பு, கவுரமான வேலை, கை நிறைய சம்பளம் சலுகைகள் ஆகியவை வங்கி வேலைகளில் நிரம்பியிருப்பதால் தேர்வர்கள் பலரும் வங்கிகளில் வேலைக்கு சென்று விட வேண்டும் என்ற பெரும் கனவுடன் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். ஆண்டு தோறும் ஐபிபிஎஸ் வெளியிடும் கிளார்க் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து போட்டி தேர்வர்கள் படித்து வருவதை காண முடியும்.
இந்த நிலையில் தான் போட்டி தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்:
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,128 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 665 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பேங்க் ஆப் இந்தியா (16 பணியிடங்கள்), கனரா வங்கி ( 40), சென்ட்ரல் வங்கி (90), இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (75), பஞ்சாப் நேஷனல் வங்கி ( 35), பஞ்சாப் சிந்த் வங்கி ( 09) என மொத்தம் தமிழகத்தில் 665 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி:
இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.07.1996 க்கு முன்பாக பிறந்தவர்களும் 01.07.2004 பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளவுர்வுகள் உண்டு. எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை:
முதன்மை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், புதுவை ஆகிய நகரங்களில் முதன்மை தேர்வு நடைபெறும். மெயின் தேர்வை பொறுத்தவரை சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருது நகர், புதுச்சேரி ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் ரூ.175 ஆகும் இன்று முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 21.07.2024 கடைசி நாளாகும்.
தேர்வு தேதி:
முதன்மை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும். செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மெயின் தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து அறிந்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.ibps.in/wp-content/uploads/CRP_Clerks_XIV_Final_Notification_28.6.24.pdf என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.. விண்ணப்பிக்க https://www.ibps.in/index.php/clerical-cadre-xiv/ என்ற இணையதள லிங்கிற்கு சென்று தேவையான விவரங்களை கொடுத்து விண்ண்ப்பிக்கலாம்..
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications