பொதுத்துறை வங்கிகளில் வேலை.. 5,208 காலிப்பணியிடங்கள்! தேதி முடிய போகுது.. மறந்துடாதீங்க
சென்னை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 5,208 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே அவகாசம் இருப்பதால் ஆர்வம் உள்ளவரக்ள் மறக்காமல் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
வங்கிகளில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள இளம் பட்டதாரிகள், ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வு அறிவிப்பினை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்பை ஐபிபிஎஸ் அண்மையில் வெளியிட்டது.

எஸ்.பி.ஐ வங்கி தவிர்த்து இதர பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் பெரும்பாலும் ஐபிபிஎஸ் மூலமே நடத்தப்படுகிறது. ஐபிபிஎஸ் வங்கி வாரியாக வெளியிட்ட காலிப்பணியிட விவரங்கள், கல்வி தகுதி, விண்ணப்ப விவரங்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் ஒரு நினைவூட்டலாக இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
புரொபேஷனரி அதிகாரி / மேனேஜ்மெண்ட் டிரெய்னி (PO/MT) - பதவிகளில் 5208 - பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கி வாரியாக காலிப்பணியிட விவரங்கள்
பேங்க் ஆஃப் பரோடா - 1000
பேங்க்ஆஃப் இந்தியா - 700
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 1000
கனரா வங்கி - 1000
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா (சிபிஐ) - 500
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 450
பஞ்சாப் நேஷனல் வங்கி - 200
பஞ்சாப் & சிந்து வங்கி - 358
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2025 நிலவரப்படி, 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் கிடைக்கும். அதாவது, எஸ்சி எஸ்டி பிரிவினர் என்றால் 35 வயது வரையும் ஓபிசி பிரிவினர் என்றால் 33 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்:
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்க்ள் அமைக்கப்படும். முதல் நிலை தேர்வு சென்னை, கோயம்புத்தூர், கடலூர் ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில் / கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு நடைபெறும். மெயின் தேர்வுகளை பொறுத்தவரை சென்னை, கோவை மதுரை, நாமக்கல் சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஐபிபிஎஸ் வெளியிட்ட தேர்வு அறிவிப்பினை ஒரு முறை படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி பிரிவினர் ரூ.175 செலுத்தினல் போதும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பிக்க முதலில் 21.07.2025 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பிக்க வரும் 28 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் இரண்டு நாட்களில் முடிய இருப்பதால், ஆர்வமும் தகுதியும் இருந்து இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் உடனே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
முதல் நிலை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும். தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியாகும். மெயின் தேர்வு அக்டோபரில் நடைபெறும். தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்படும். தேர்வர்களுக்கு ஜனவரி/ பிப்ரவரியில் பணி நியமனம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
தேர்வு எப்படி இருக்கும்?
முதல் நிலை தேர்வு 100 மதிபெண்களுக்கு நடைபெறும். ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்படும். ஆங்கில மொழித்தேர்வு 30 மதிப்பெண்களுக்கும், Quantitative Aptitude-30 மதிப்பெண்களுக்கும், ரீசனிங் திறன் தேர்வு 40 மதிப்பெண்களுக்கும் கேட்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக முறையே 20 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்படும். இதில் தேர்வு பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
தேர்வு அறிவிபினை படிக்க; https://www.ibps.in/












Click it and Unblock the Notifications