மிஸ் பண்ணிடாதீங்க.. பட்டதாரி இளைஞர்களே உங்களுக்கு அருமையான வாய்ப்பு.. 10,729 வங்கி பணியிடங்கள்!
சென்னை: பல்வேறு வங்கிகள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வாரியம் மூலம் இந்த ஆண்டு காலிபணியிடங்களை நிரப்ப உள்ளன. மொத்தம் 10,729 குரூப் "ஏ" மற்றும் "பி" பணியிடங்கள் பல்வேறு வங்கிகள் உள்ளன. இதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வங்கி பணியில் சேர விரும்புவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு ஆகும்.
பாரத ஸ்டேட் வங்கி தவிர இந்தியாவின் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும், தங்கள் நிறுவனளுக்கான பணியாளர்களை ஐ.பி.பி.எஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் பொதுத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்கின்றன.
அந்த வகையில், ஆந்திர வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கிகள் உள்பட 43 பொதுத்துறை வங்களில் 2021 ஆம் நிதி ஆண்டிற்கான 10,729 குரூப் "ஏ" மற்றும் குரூப் "பி" பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பட்டதாரி இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறலாம். வங்கி பணிக்கு தயாராகி வரும் இளைஞர்கள் வரும் 28.06.2021க்குள் https://www.ibps.in தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

காலியிடங்கள்
நிறுவனம்: Institute of Banking Personnel Selection என்ற அமைப்பு தான் தேர்வை நடத்துகிறது. இந்தியா முழுவதும் காலியாக உள்ள Group "A"-Officers, Group "B"-Office Assistant Posts பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள் 10,729 ஆகும்.

என்ன தகுதி
கல்வி தகுதி என்று பார்த்தால் எந்த டிகிரி படித்தவர்களும் (இளங்கலை பட்டதாரிகள்) விண்ணப்பிக்கலாம். பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்சிஏ, எம்பிஏ முதுநிலை பட்டதாரிகள், சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். என்னனென்ன பணிக்கு யார் யார் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை முழுயைமாக அறிய இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்,

வயது தகுதி
01.06.2021 தேதியின்படி Officer Scale- III (Senior Manager) பணியிடங்களுக்கு 21 முதல் 40 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். Officer Scale- II (Manager)- பணிக்கு 21 முதல் 32 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், Officer Scale- I (Assistant Manager)-18 முதல் 30 வயதிற்குள்ளும், Office Assistant (Multipurpose) -18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி படி எஸ்சி, எஸ்டி, ஒபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது..

விண்ணப்பம்
முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் ஒற்றை நிலை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். Officers (Scale-I, II & III) பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.175, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.850 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்த அட்டைகள் மற்றும் நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். https://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2021.












Click it and Unblock the Notifications