வங்கிகளில் பணியாற்ற சூப்பர் சான்ஸ்.! சிறப்பு அதிகாரிகள் பணி.. 1402 பணியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: எஸ்.பிஐ தவிர்த்து நாடு முழுவதும் உள்ள பிற பொதுத்துறை வங்கிகளில் SPECIALIST OFFICERS பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. தகுதி உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதிக்குள் https://ibps.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியை தவிர்த்து நாட்டில் உள்ள பிற பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பபடுகிறது. அண்மையில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது SPECIALIST OFFICER பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்:
எந்தெந்த வங்கிகள்: பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி, யுகோ வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்புகளில் தளர்வுகள் உண்டு. பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
பணியிடங்கள் விவரம்: மொத்தம் 1402 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கல்வி தகுதி என்ன? இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து டிகிரி முடித்து இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முழுமையாக முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் டிகிரியில் மொத்தமாக பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தை குறிப்பிட வேண்டியிருக்கும். எனவே இறுதியாண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினர் ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதன்மை தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். முதன்மை தேர்வில் கட் ஆஃப் அடிப்படையில் தேர்வு செய்யபட்டு மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு நேர்முகத்தேர்வு நடைபெறும்.
பணியிடங்கள்: ஐடி ஆபிசர், வேளாண்மை கள அலுவலர் (agricultural Field officer), RajbhashaAdhikari, சட்ட அதிகாரி, எச். ஆர் /பெர்சனல் ஆஃபிசர், மார்க்கெட்டிங் ஆபிசர் ஆகிய பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. துறை சார்ந்த கல்வி தகுதி அவசியம். அதாவது சட்ட அதிகாரி பணியிடத்திற்கு சட்டம் பயின்று இருக்க வேண்டும்.
அதெபோல், ஐடி ஆபிசர் பணியிடத்திற்கு என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், அதுமட்டும் இன்றி கம்ப்யூடர் சயின்ஸ் டெக்னாலாஜி டிகிரி, கம்ப்யூட்டர் அப்லிகேஷன்ஸ், ஐடி/எலக்ட்ரிக்கல் &எலக்ட்ரானிக்ஸ் &இன்ஸ்ட்ருமெண்டேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதிகள் பற்றிய முழு விவரங்ளை தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று முதல் (ஆகஸ்ட் 1) விண்ணப்பிக்கலாம். www.ibps.in. என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். IBPS SO 2023 க்கான (சிறப்பு அதிகாரி பணியிடம் 2023) , முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 30 அல்லது 31 இல் நடத்த ஐபிபிஎஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. அதன்பின்னர் முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறலாம் உத்தேசமாக அறிவித்துள்ளது.
தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், ஆகிய நகரங்களில் முதன்மை தேர்வு நடைபெறும். சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறும். தேர்வு அறிவிப்பாணையை பார்க்க https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_SPL_XIII.pdf இதில் கிளிக் செய்யவும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications