Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைநிறைய சம்பளம்.. பிளஸ் 2 முடித்தவரா நீங்கள்? ஐசிஎஸ்எஸ்ஆர்-ல் அசத்தலான வேலை.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை மாதம் ரூ.19,900 முதல் ரூ.1.77 லட்சம் வரையிலான சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Social Science Research or ICSSR) செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள 3 வகையான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

 ICSSR Recruitment for various post including Assistant Director with good salary

காலியிடங்கள்: ஐசிஎஸ்எஸ்ஆர்-ல் உதவி இயக்குனர் (Assistant Director)(ஆராய்ச்சி - Research) பணிக்கு 8 பேர், ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant) பணிக்கு 14 பேர், லோவர் டிவிஷன் கிளர்க் (Lower Division Clerk) பணிக்கு 13 பேர் என மொத்தம் 35 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நோ எக்ஸாம்! டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவரா நீங்கள்? சென்னை பெல் நிறுவனத்தில் சூப்பர் பணி

கல்வி தகுதி: உதவி இயக்குனர் (ஆராய்ச்சி) பணிக்கு சமூக அறிவியல் சார்ந்த மாஸ்டர் டிகிரியில் முடித்திருக்க வேண்டும். ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு எம்ஏ சமூக அறிவியல் சார்ந்த டிகிரி முடித்திருக்க வேண்டும். லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து நிமிடத்துக்கு 30 வார்த்தைகள் டைப் செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: உதவி இயக்குனர் (ஆராய்ச்சி) பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் லோவர் டிவிஷன் கிளர்க் பணிகளுக்கு 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 05.02.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.

சூப்பர் வேலை.. மாதம் ரூ.40,000 டூ ரூ.1.80 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் எச்எஸ்சிஎல் நிறுவனம்

மாதசம்பளம்: உதவி இயக்குனர் (ஆராய்ச்சி) பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.56,100 முதல் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரையும், லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையும் சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்குள் https://icssr.org/ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்ப காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+