டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்களா நீங்கள்? ஐஐஐடிடிஎம்-யில் அரசு வேலை.. காஞ்சிபுரத்தில் பணி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் 6 பிரிவுகளில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்பப்பட இருக்கிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM or Indian Instituter Of Information Technology, Design And Manufacturing) செயல்பட்டு வருகிறது.
இங்கு மொத்தம் 5 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காஞ்சிபுரத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் டெக்னிக்கல் ஆபிசர், ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரண்ட் பணிக்கு தலா 2 பேர், ஜூனியர் சூப்பிரண்ட் (லைப்ரேரி) பணிக்கு ஒருவர், ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 10 பேர், ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 17 பேர் என மொத்தம் 32 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், பிரிவில் கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்க், இன்ஸ்ட்ருமென்டேசன் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், டிப்ளமோ கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், ஐடிஐயில் பிட்டர், மெசினிஸ்ட் உள்ளிட்ட படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமா 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிவாரியாக பார்த்தால் டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு 45 வயது, ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரண்ட், ஜூனியர் சூப்பிரண்ட் லைப்ரேரி பணிக்கு 32 வயது, ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் www.iiitdm.ac.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்ப்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, இஎஸ்எம் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தற்போதைய அறிவிப்பில் பணிக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விபரம் எதுவும் குறிப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் அரசு விதிகளின்படி நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
விண்ணப்ப தேதி நீட்டிப்புக்கான அறிவிப்பு Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications