ஐஐடியில் வேலை.. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி போதும்.. மாதம் ரூ.56 ஆயிரம் வரை சம்பளம்.. செம சான்ஸ்
திருவனந்தபுரம்: பாலக்காடு ஐஐடியில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட 22 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனம் ஐஐடி. சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனம் உள்ளது. ஐஐடியில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிட்டு நிரப்பப்படுவது வழக்கம். கல்வி பணி மட்டும் இன்றி நிர்வாக பணி உள்பட இதர பணிகளுக்கான அறிவிப்புகளையும் ஐஐடி அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அறிவிப்பை வெளியிடும்.
அந்த வகையில், தமிழ்நாடு எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநிலம் பாலக்காடு ஐஐடியில் காலியாக மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர் - 09 (பணியிடங்கள்)
ஜூனியர் சூப்பிரண்டு - 06
தோட்டக்கலை உதவியாளர் - 01
உதவி பாதுகாப்பு அதிகாரி - 01
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் - 05
என மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர் பணிக்கு பிஇ/ பிடெக், எம்.எஸ்.சி (துறை சார்ந்த பிரிவு) ஆகிய ஏதேனும் ஒன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஜூனியர் சூப்பிரண்டு பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். கம்பியூட்டரில் நன்கு பணியாற்ற தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தோட்டக்கலை பராமரிப்பாளர் பணிக்கு தோட்டக்கலை,/ விவசாயம், /வனவியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மல்டி டாஸ்கிங் பணிக்கு பத்தாம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய பணியிடங்களுக்கு தேவையான அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக தேர்வு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரகள் அதை படித்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: மல்டி டாஸ்கிங் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். பிற பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

சம்பள விவரம்: சம்பளத்தை பொறுத்தவரை மல்டி டாஸ்கிங் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் 56,900 வரை கிடைக்கும். இதர அனைத்து பணியிடத்திற்கும் ரூ. 35,400-1,12,400 வரை கிடைக்கும்.
தேர்வு முறை: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி./எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக வரும் 03.11.2023 கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://joinus.iitpkd.ac.in/ என்ற இணையதள பக்கத்தை கிளிக் செய்யவும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://joinus.iitpkd.ac.in/sites/staff-recruitment.iitp-portal.local/files/2023-09/c636cd72-40fc-4bee-a18b-9edbbc9ecf69.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications