டிகிரி மட்டுமே போதும்.. மாதம் ரூ.35,000 சம்பளம்.. வருமானவரித்துறையின் கூட்டுறவு வங்கியில் சூப்பர் பணி!
சென்னை: வருமான வரித்துறையின் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.21 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ35 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வருமான வரித்துறையின் கூட்டுறவு வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

வருமான வரித்துறையின் கூட்டுறவு வங்கியில் தற்போது எக்ஸிக்யூட்டிவ் ஆபிசர், கிளார்க் ஆகிய பிரிவுகளில் ாட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் எக்ஸிக்யூட்டிவ் ஆபிசர் பணிக்கு 3 பேரும், கிளார்க் பணிக்கு 8 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். எக்ஸிக்யூட்டிவ் ஆபிசர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரமும், கிளார்க் பணிக்கு மாதம் ரூ.21 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 31.03.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். அரசு விதிகளின் படி வயது தளர்வும் உண்டு.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 28 ம் தேதிக்குள் incometaxbank.co.in அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். எக்ஸிக்யூட்டிவ் ஆபிசர் பணிக்கு ரூ.1000ம், கிளார்க் பணிக்கு ரூ.800 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications