தமிழ்நாட்டிலேயே வேலை பார்க்கலாம்.. வருமான வரித்துறை பணியிடம்! தேதி முடிய போகுது.. உடனே விண்ணப்பிங்க
சென்னை: வருமான வரித்துறையில் கேண்டீன் அட்டண்டட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. தமிழகம் மற்றும் புதுவை பிராந்தியம் தலைமை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள 25 கேண்டீன் அட்டண்டட் பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
வருமான வரித்துறையானது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறைக்கான அலுவலகங்கள் உள்ளன. இதில் ஏற்படும் காலிப்பணியிங்களானது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகிறது. அதன்படி, தற்போது தமிழ்நாடு மற்றும் புதுவையில் 'கேண்டீன் அட்டண்டட்' பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது.

வரும் 22ஆம் தேதி தான் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த சான்சை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
பணியிடங்கள்: வருமான வரித்துறையின் தமிழகம் மற்றும் புதுவை பிராந்தியத்தில் தலைமை ஆணையர் அலுவலகத்தில் உள்ள 25 கேண்டீன் அட்டண்டட் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித்தகுதி: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 - 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அரசு ஊழியர்களுக்கு 40 வயது வரை உச்ச வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
தேர்வு முறை: ஆன்லைனில் தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியாக மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பதாரர்கள் கடந்த 9 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வருகிறார்கள். விண்ணப்பிக்க நாளை மறுநாள் (22.09.2024) தான் கடைசி என்பதால் தகுதியுள்ள விண்ணப்பதார்கள் அதற்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள். 06.10.2024 அன்று சென்னையில் தேர்வு நடைபெறும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் https://www.tnincometax.gov.in/ செய்யவும்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications