'வேலை.. வேலை.. வேலை..' +2 படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடியா இருக்கு
சென்னை: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள கிளார்க், ஓட்டுநர் மற்றும் சிவில் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள கிளார்க், ஓட்டுநர் மற்றும் சிவில் டெக்னீசியன் உள்ளிட்ட 21 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் தேவைப்படும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மொத்த காலியிடங்கள் - 21
பணி வாரியாக:
Lower Division Clerk (LDC) - 10 பணியிடங்கள்
CTI (Civilian Technical) - 02 பணியிடங்கள்
Steno Grade -II - 01 பணியிடங்கள்
Civilian Motor Driver - 8 பணியிடங்கள்
கல்வித் தகுதி என்ன:
12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது இந்த பணிக்குத் தொடர்பான பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களும் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் என்ன - ரூ 19,900 முதல் ரூ 81,000 வரை
வயது வரம்பு
Lower Division Clerk, Civilian Technical, Steno Grade -II பணியிடங்களுக்கு 18 முதல் 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Civilian Motor Driver பணியிடத்திற்கு 18 முதல் 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் முறை
https://indianarmy.nic.in/home என்ற தளத்திற்குச் சென்று, அதில் இருக்கும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் கட்டாயம் இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய தேதி - அக்டோபர் 10, 2021
முகவரி
The Presiding Officer, Civilian Direct Recruitment (Secrutiny of Application) Board, Headquarters 1 Signal Traning Centre, Jabalpur (MP) - 482001.
விண்ணப்பிக்க
https://indianarmy.nic.in/home என்ற தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை டவுன்லோட் செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications