இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை.. உதவி மேலாளர் பணியிடம்.. டிகிரி தகுதி தான்!
சென்னை: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் (IPPB) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை வங்கியாகும். கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கியானது, நாடு முழுக்க கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சேவைகளை வழங்கி வருகிறது.

பணியிடங்கள் விவரம்
அஞ்சல் நிலையங்கள் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் மூலமாக சேமிப்பு கணக்கு திறப்பு, பணம் அனுப்புதல், பில்கள் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள் வீடு தோறும் வங்கி சேவைகளை வழங்குவது இதன் சிறப்பாகும். தற்போது இந்த வங்கியில் உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
* உதவி மேலாளர் - 110 காலியிடங்கள்
* ஜூனியர் அசோசியேட் - 199 காலியிடங்கள் என மொத்தம் 309 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும்.
வயது வரம்பு:
* உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சமாக 20 வயது நிரம்பியவர்களாகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
* ஜூனியர் அசோசியேட் பணிக்கு, குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
* அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ippbonline.com மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். நேற்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
தேர்வு முறை:
பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இருப்பினும், தேவைப்படின் ஆன்லைன் தேர்வு அல்லது குழு விவாத நேர்காணல் நடத்த வங்கிக்கு உரிமை உண்டு. மேலும் விவரங்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை ரூ.750 செலுத்த வேண்டும். இது ஒரு தற்காலிக பணியாகும். ஒரு வருடத்திற்கு மட்டுமே இந்த பணி நியமனமானது செல்லுபடியாகும். வங்கியின் தேவைகளுக்கு ஏற்ப, திருப்திகரமான செயல்திறனின் அடிப்படையில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பணியானது நீட்டிப்பு செய்யப்படலாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications