தபால் துறையில் வேலை.. 8 ம் வகுப்பு பாஸ் போதும்.. ரூ.63,200 வரை சம்பளம்.. சென்னையிலேயே பணி
சென்னை: தபால் துறையில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புடன் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: தபால் துறையில் தற்போது Skilled Artisans பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி மோட்டார் வாகன மெக்கானிக் பணிக்கு 4 பேர், மேட்டார் வாகன எலக்ட்ரிஷியன், கார்பென்டர், டயர்மேன் (Tyreman) பணிக்கு தலா ஒருவர், பிளக்ஸ்மித் (Blacksmith) பணிக்கு 3 பேர் என மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: விண்ணப்பம் செய்வோர் தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 8ம் வகுப்பு முடித்து தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மோட்டார் வாகன மெக்கானிக் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கட்டாயமாக எச்எம்வி ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். வயது வரம்பு என்பது 01.07.2024ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் கிடைக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் உரிய ஆவணங்களின் Self Attested கொண்ட நகல்களை அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பங்களை The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai - 600 006 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இப்படி அனுப்பும்போது அந்த விண்ணப்ப கவரின் மேல்பகுதியில் Application for the post of Skilled Artisan in Trade என எழுதி அதன்பிறகு விண்ணப்பம் செய்யும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
சென்னையில் நியமனம்: இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் Competitve Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான பாடத்திட்டம், தேதி, இடம், நேரம் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இதில் பாஸாகும் நபர்கள் சென்னையில் பணிக்கு சேர்த்து கொள்ளப்படுவார்கள். பணியின் முதல் ஓராண்டு என்பது பயிற்சி (Probation) காலமாகும்.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
மத்திய அரசு வேலை.. 243 பணியிடங்கள்.. 1.77 லட்சம் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications