இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் அதிரடி மாற்றம்.. ஆன்லைன் தேர்வு முதல்.. விண்ணப்பம் வரை முழு விவரம்
இந்திய ராணுவ ஆள்சேர்ப்பில் முதல் முறையாக ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (CEE) செயல்முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
திருச்சி: இந்திய ராணுவ ஆள்சேர்ப்பில் முதல் முறையாக ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (CEE) செயல்முறை கொண்டுவரப்படுவதாக திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குனர் கெர்னல் தீபக் குமார் கூறினார்.
ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy. nic. in என்ற இணையதளத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி வரை ஆர்வமுள்ளவர்கள் தங்களது ஆதார் கார்டு மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழை கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு நேரடியாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பாக பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என கெர்னல் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குனர் கெர்னல் தீபக் குமார் புதன்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருச்சி மண்டல ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் சார்பில் ராணுவத்துக்கு அக்னிபாதை (அக்னிபாத்) திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆள்சோ்ப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

எப்படி
ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (CEE) இந்திய இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையின் முதல் கட்டமாக இருக்கும். www.joinindianarmy.nic.in இணையதளத்தில் 16 பிப்ரவரி 2023 முதல் 15 மார்ச் 2023 வரை இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.

திருச்சியில்
ஆன்லைன் பொது நுழைவு தேர்வு 17 ஏப்ரல் 2023 முதல் 30 ஏப்ரல் 2023 வரை இந்தியா முழுவதும் 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும். திருச்சி மண்டலத்தில் திருச்சியில் இரண்டு மையங்களிலும் திருநெல்வேலியில் ஒரு மையத்திலும் இணையதள தேர்வு நடைபெறும்.

ஆங்கிலம்
விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை நன்கு அறிந்துகொள்ள உதவும் வகையில், 'பதிவு செய்வது எப்படி' மற்றும் 'ஆன்லைன் நுழைவுத் தேர்வில் கலந்துகொள்வது எப்படி' பற்றிய கல்வி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவினருக்கும் மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இணைப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே கணினி அடிப்படையிலான தேர்வில் கலந்துகொள்ளலாம். தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நடைபெறும்.

250 கட்டணம்
ஆன்லைன் பொது நுழைவு தேர்வுக்கான கட்டணம் ஒரு வேட்பாளருக்கு ரூ.500/- என்ற போதிலும் 50% செலவை ராணுவம் ஏற்கும் என்பதால் விண்ணப்பதாரர்கள் ரூ. 250/- செலுத்தினால் போதும் தேர்வாளர்கள் ஐந்து தேர்வு மையங்கள் பதிவு செய்து அதிலிருந்து அவர்களுக்கு தேர்வு இடம் ஒதுக்கப்படும். உதவி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

சிக்காதீங்க
பதிவு கேள்விகளுக்கு, வேட்பாளர்கள் மின்னஞ்சல் செய்யலாம். [email protected] மற்றும் ஆன்லைன் CEE வினவல்களுக்கு அவர்கள் [email protected] மற்றும் மொபைல் எண்.7996157222க்கு மின்னஞ்சல் செய்யலாம். அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்புகாக 17 1 /2 முதல் 21 வயது வரை உள்ளவரக்ள் விண்ணப்பிக்கலாம். இத் தோ்வு நியாயமாகவும், வெளிப்படையாகவும் தகுதி அடிப்படையில் நடைபெறுகிறது. இதில் சேர எந்த நிலையிலும் யாருக்கும் லஞ்சம் தரக்கூடாது. ஆள்சோ்ப்பு முகவா்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் நோ்மையறற நபா்களிடம் யாரும் சிக்க வேண்டாம் இவ்வாறு கெர்னல் தீபக் குமார் கூறினார். பேட்டியின் போது மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை திருச்சி மாவட்ட கள விளம்பர அலுவலா் தேவிபத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications