இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை.. 300 பணியிடங்கள்! 86000 சம்பளம்.. 2 நாள்தான் இருக்கு! மறந்துடாதீங்க
சென்னை: இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 2 ஆம் தேதி தான் கடைசி நாள் ஆகும். மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் 86 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
நாட்டில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வாணயம் மூலமாகவும், சில நியமனங்கள் நேரடியாகவும் நியமிக்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள லோக்கல் பேங்க் ஆபீஸர்ஸ் JNG ஸ்கேல்-1 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 300 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிதான் கடைசி நாளாகும்.
பணியிடங்கள் விவரம்: மொத்தம் 300 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் என 5 மாநிலங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு / புதுவையில் மட்டும் 160 காலி பணியிடங்கள் உள்ளது.
கல்வி தகுதி & வயது வரம்பு: உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடத்திற்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தால் போதும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டோர் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு. எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் & தேர்வு முறை: மாதம் 48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: எஸ்.சி/எஸ்டி பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.175 கட்டணம் செலுத்த வேண்டும். பொது பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1,000 கட்டணமாக செலுத்த வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 2 ஆம் தேதிக்குள் (02.09.2024) விண்ணப்பிக்க வேண்டும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications