மாதம் 30,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 630 பணியிடங்கள்.. விட்றாதீங்க
சென்னை: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 630 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு மாதம் ரூ.29 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இந்திய கடலோர காவல்படை செயல்படுகிறது. இந்திய ஆயுதப்படையின் துணை பிரிவாக உள்ள கடலோர பாதுகாப்பு படை இந்தியாவின் கடல் வளங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகிறது. துணை ராணுவத்திற்கு நிகரானதாக கடலோர காவல்படை உள்ளது.

கடந்த 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ல் கடலோர காவல் படை உருவாக்கப்பட்டது. இந்திய கடற்படை, மீன்வளத்துறை, சுங்கத்துறை, மாநில காவல்துறை, மத்திய ஆயுதப்படைகளுடன் ஒருங்கிணைந்து இது இயங்குகிறது. இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. மாலுமி (பொதுப் பணி) - 260
2. மெக்கானிக்கல் - 30
3. எலக்ட்ரிக்கல் - 11
4. எலக்ட்ரானிக்ஸ் - 19 என மொத்தம் 630 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி:
இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ பாடம் எடுத்து படித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 22 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 01 ஆகஸ்ட் 2024 முதல் ஆகஸ்ட் 2008 க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி எஸ்சி / எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
நாவிக் (மாலுமி) என்றால் ரூ.21,700 முதல் மாதம் சம்பளம் வழங்கப்படும்.
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பணியிடங்கள் என்றால் மாதம் ரூபாய் 29,200 முதல் வழங்கப்படும்.
தேர்வு முறை:
ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் தேர்வு நடைபெறும். இரண்டாவது கட்ட தேர்வாக அடையாள சோதனை, பயோமெட்ரிக் வெரிபிகேஷன், உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும். அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும்.
தேர்வுக் கட்டணம்:
எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300 கட்டணம் ஆகும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். தேர்வர்கள் தேர்வு அறிவிப்பு மற்றும் பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை https://joinindiancoastguard.cdac.in/ என்ற தேர்வு இணையதளத்தில் முழுமையாக தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள் 11.06.2025 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 25.06.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT2026adv.pdf
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications