இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. 750 பணியிடங்கள்.. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்.. விவரம்
சென்னை: நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீசஸ் வங்கியில் (Indian Overseas Bank - IOB BANK) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முறைகள் எப்படி நடைபெறும், எப்போது முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் மிக முக்கியமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருக்க கூடியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. ஐ.ஓ.பி என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகள் உள்ளன. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த வங்கியில் ஆட்சேர்ப்பு பணிகளை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்புகிறது.

அது மட்டும் இன்றி தனியாக வங்கியே நேரடியாகவும் சில பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்தியவின் ஓவர் சீஸ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
தமிழ்நாடு 200, கேரளா 33, கர்நாடகா 06, ஆந்திர பிரதேசம் 15, புதுவை 12, மகராஷ்டிரா 85, உத்தர பிரதேசம் 110, மேற்கு வங்காளம் 32 என பல்வேறு மாநிலங்களில் பயிற்சி பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. மொத்த பணியிடங்கள் 750 ஆகும்.
கல்வி தகுதி:
கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கபட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 01.04.2021 முதல் 01.08.2025 க்குள் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 01.08.2025 தேதியை கணக்கிட்டு வயது வரம்பு கணக்கிடப்படும். எனினும் எஸ்சி/எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பணியிடங்களில் சேர்க்கப்படுவார்கள். மெட்ரோ நகரங்களில் உள்ள கிளைகள் என்றால் ரூ.15 ஆயிரம், அர்பன் நகரங்களுக்கு ரூ.12 ஆயிரம், ஊரக பகுதிகளில் உள்ள கிளைகளுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியமாக அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மொழியை தெரிந்து இருப்பது அவசியம்.
தேர்வு முறை:
ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் உள்ளூர் மொழித்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்து தேர்வை பொறுத்தவரை 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். பொது அறிவு, ஆங்கிலம், ரீசனிங் அப்டிடியூட், கணிணி பற்றிய அறிவு உள்ளிட்டை அடிப்படையில் வினாக்கள் இடம் பெற்று இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்:
GEN / OBC / EWS பிரிவை சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.944 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.708 கட்டணம் ஆகும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.472 கட்டணம் ஆகும். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொண்ட பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள் 10.08.2025 ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 20.08.2025 ஆகும். தேர்வு நடைபெறும் நாள்; 24.08.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.iob.in/upload/CEDocuments/iobApprentices-750-Vacancies-2025-26-08082025.pdf
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications