ரயில்வேயில் வேலை வேணுமா? டிக்கெட் கிளர்க் உள்பட 8,113 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது!
சென்னை: இந்தியன் ரயில்வேயில் டெக்னிக்கல் அல்லாத பணியிடங்களை (என்.டி.பி.சி) நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 8,113 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியன் ரயில்வேயில் சுமார் 12 லட்சம் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். பணி பாதுகாப்பு, நல்ல சம்பளம், சலுகை உள்ளிட்டவை இருப்பதால் ரயில்வேயில் பணி செய்ய வேண்டும் என்பது வேலை தேடும் இளைஞர்களின் பெரும் விருப்பமாக உள்ளது. ரயில்வே பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தேர்வு மூலமாக நிரப்புகிறது.

ரயில்வே துறையில் எற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது, டெக்னிக்கல் அல்லாத பணியிடங்கள் (என்.டி.பி.சி) நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்களே அவகாசம் உள்ளது. எனவே உடனே விண்ணப்பித்து விடுங்கள்
பணியிடங்கள் விவரம்:
தலைமை கமர்ஷியல் (டிக்கெட் சூப்பர்வைசர்) - 1736 பணியிடங்கள்
ஸ்டேஷன் மாஸ்டர் - 994
சரக்கு ரயில் மேலாளர் - 3144
ஜுனியர் அக்கவுண்ட் உதவியாளர் - 1507
சீனியர் கிளர்க் -732 என 8113 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: அனைத்து பணியிடங்களுக்கும் தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்தது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். ஜூனியர் அக்கவுண்ட் அஸ்சிஸ்டண்ட் மற்றும் சீனியர் கிளர்க் பணியிடத்திற்கு மட்டும் பட்டப்படிப்புடன் டைப்பிங் திறனும் அவசியம்.
வயது வரம்பு: அனைத்து பணியிடத்திற்கும் 18 வயது முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகை உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
ஸ்டேஷன் மாஸ்டர் - மாதம் ரூ. 35,400/-
Chief கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் - மாதம் ரூ. 35,400/-
சீனியர்கிளர்க் - மாதம் ரூ. 29,200/-
கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் - மாதம் 21,700/-
இந்த சம்பளத்துடன் அரசு விதிகளின் படி இதர சலுகைகளும் உண்டு.
தேர்வு முறை: இரண்டு கட்ட கணினி வழி தேர்வு நடைபெறும். அதன் பிறகு திறன் தெர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும். சிபிடி தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.500- செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 திருப்பி அளிக்கப்படும். ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 20.10.2024 கடைசி நாள் ஆகும். 23.10.2024 முதல் 30.10.2024 வரை விண்ணப்பித்தினை திருத்திக் கொள்ள அவகாசம் அளிக்கப்படும். விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணபித்து விடுங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications