Indian Railway Job: இந்தியன் ரயில்வேயில் வேலை.. டிகிரி போதும்! 1 லட்சத்திற்கு மேல் சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு (Indian Railway Job) அறிவிக்கப்பட்டுள்ளது. செக்ஷன் கன்ட்ரோலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை 1.10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு என்ன போன்ற விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நல்ல சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைப்பதால் ரயில்வே துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது.

பணியிடங்கள் விவரம்:
ரயில்வேயை பொறுத்தவரை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வாயிலாக ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. காலிப்பணியிடங்களுக்கு தகுந்த அறிவிப்பு வெளியிட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் தான், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
* செக்ஷன் கன்ட்ரோலர் - 368 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
* கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கபட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் சலுகை அளிக்கப்படும். வயது வரம்பு 14.10.2025 தேதியிட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசின் 7-வது ஊதிய கமிஷன் லெவல் 6 படி சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.35,400 முதல் 1,12,400 வரை சம்பளமாக கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழி தேர்வு (சிபிடி), மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்:
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ரூ.500 விண்ணப்ப கட்டணமாக கோரப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணம் ஆகும்.
சிபிடி தேர்வு எழுதிய பிறகு முழுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். ரூ. 500 கட்டணம் செலுத்தியவர்களுக்கு ரூ.400 திருப்பி தரப்படும். தேர்வுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 14.10.2025 ஆகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications