‛‛கோவில்பட்டியில் ஐடி வேலை’’.. அழைக்கும் பிரபல நிறுவனம்.. ஜூலை 20ம் தேதி இன்டர்வியூ
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 2024ம் ஆண்டில் படிப்பை முடித்த Freshersம் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான இன்டர்வியூ என்பது ஜூலை 20ம் தேதி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்ஃபோனே டெக்னாலஜி எனும் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது ColdFusion Development பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதாவது வெப் மற்றும் செல்போன் செயலி மேம்பாடு, டெஸ்ட்டிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் கோவில்பட்டியில் உள்ள இன்ஃபோனே டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அதன்படி தற்போதைய அறிவிப்பின்படி இன்ஃபோனே டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் டிரெய்னி சாப்ட்வேர் இன்ஜினியர் (Freshers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய் விரும்புவோர் பிஇ, பிடெக், எம்டெக், எம்சிஏ படிப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, இசிஇ, ட்ரிபிள்இ உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். அதோடு 60 சதவீத மதிப்பெண்களுடன் பாஸாகி இருக்க வேண்டும்.
மேலும் ஏதாவது ஒரு Programming Languages-ல் டிரெய்னிங் ஆகி இருக்க வேண்டும். Coding திறமை இருக்க வேண்டும. ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Presentation தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்வில்லை. இன்டர்வியூவில் தேர்வாகும் பட்சத்தில் சம்பளம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
"மதுரையில் Hybrid முறையில் பணி’’.. அழைக்கும் பிரபல நிறுவனம் HireX.. யாருக்கெல்லாம் வாய்ப்பு
இந்த பணியை பெற விரும்புவோர் அனைத்து வகையான கல்வி சான்றிதழ்கள், பயோ டேட்டாவை எடுத்து கொண்டு நேரடியாக இன்டர்வியூவில் பங்கேற்கலாம். இன்டர்வியூ என்பது ஜூலை 20ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இன்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Infoane Technologies, 14/3 Jaya Complex, Subha Nagar, Near New Bus Stand, Kovilpatti - 628 502 என்ற முகவரிக்கு ஜூலை 20ம் தேதி காலை 10 மணிக்கு முன்பாகவே சென்றுவிட வேண்டும்.
‛Hybrid’ முறையில் வேலை.. டிகிரி மட்டுமே போதும்.. HireX தரும் செம வாய்ப்பு.. மதுரையிலேயே பணி!
இன்டர்வியூ என்பது 4 படிநிலைகளை கொண்டது. முதலில் எழுத்து தேர்வு நடக்கும். இதில் 10 Aptitude, 5 டெக்னிக்கல் என மொத்தம் 15 கேள்விகள் கேட்கப்படும். அதன்பிறகு குரூப் டிஸ்கசன் நடக்கும். கம்யூனிகேசன் திறமையை பரிசோதிக்கும் வகையில் இந்த டிஸ்கசன் நடத்தப்படும். அதன்பிறகு டெக்னிக்கல் டிஸ்கசனும், எச்ஆர் டிஸ்கசனும் இருக்கும். இப்படித்தான் இன்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். Work Commitment என்பது 2 ஆண்டு 11 மாதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ரிஜிஸ்ட்டர் செய்ய Click Here












Click it and Unblock the Notifications