தேர்வு இல்லை.. இன்டர்வியூ மட்டுமே.. மாதஊதியம் ரூ.35,000.. ரயில்வேயில் வேலை.. அழைக்கும் ஐஆர்சிடிசி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடியில் பணியிடங்களை எழுத்து தேர்வு இன்றி இன்டர்வியூ முறையில் நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் சம்பளத்தி் வேலை வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து சேவையை இந்தியன் ரயில்வே வழங்கி வருகிறது. ரயில்வே துறையில் உணவு, டிக்கெட், சுற்றுலா சார்ந்த சேவைகளை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது. ஐஆர்சிடிசி என்பது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC அல்லது Indian Railway Catering and Tourism Corporation) ஆகும்.

இதில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி ஐஆர்சிடிசியில் டூரிசம் மானிட்டர்ஸ் (Tourism Monitors) பிரிவில் காலியாக உள்ள 8 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. டூரிசம் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பட்டப்படிப்புடன் ஒரு ஆண்டுக்கான டிப்ளமோ பிரிவில் டிராவல் மற்றும் டூரிசம் படிப்பை முடித்திருக்க வேண்டும். டிப்ளமோவில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 IRCTC recruitment 2023 for the post of Tourism Monitors

விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வு உண்டு. வயது வரம்பானது 2023 ஏப்ரல் மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

மாத சம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.35 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் பணி நாட்களில் தினசரி அலோவன்ஸ் தொகையாக ரூ.350 வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Hotel Polo Floatel 9, Jetty, 10 Strand Road, B.B.D Bagh, Kol:700 001 என்ற முகவரியில் ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.

நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் www.irctc.com இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு நேர்க்காணலில் பங்கேற்கலாம். பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. நேர்க்காணலில் பங்கேற்பவர்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது. நேர்க்காணலில் திறமையை நிரூபித்தால் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 ஆண்டுகள் வரை பணியில் அமர்த்தப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, பீகார் மாநிலம் பாட்னா, அசாம் மாநிலம் கவுஹாத்தியில் பணியமர்த்தப்படுவார்கள். இதுதவிர பிற இடங்களிலும் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு-விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+