IT JOBS: அனுபவம் தேவையில்லை.. சோழிங்கநல்லூரிலேயே நாளை - நாளை மறுநாள் இண்டர்வியூ.. அங்கேயே பணி
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை (மார்ச் 23), நாளை மறுநாள் (மார்ச் 24) ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. இதனால் தகுதியானவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பலன் பெறலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து Banking Non - Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது Freshers-க்கான பணியாகும். இதனால் முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. இருப்பினும் இண்டர்வியூவில் பங்கேற்போருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும்.
கல்வி தகுதி என்ன?
அதன்படி, இளநிலை பிரிவில் பைனான்ஸ், காமர்ஸ், பிசினஸ் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பிகாம், எம்காம், பிபிஏ, எம்பிஏ அல்லது அடிப்படை அக்கவுண்ட்டிங் மற்றும் பைனான்ஸ் உடன் கூடிய படிப்பை படித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம் தேவையில்லை. 2026ம் ஆண்டில் பட்ட மேற்படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் எம்சிஏ, எம்எஸ்சி ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தவர்களும், பிஇ, பிடெக், படிப்புகளை முடித்தவர்களுக்கு வாய்ப்பு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற தகுதிகள் என்னென்ன?
அதேபோல் எம்எஸ் ஆபிஸ் மற்றும் Compliance Systems தெரிந்திருக்க வேண்டும். ஸ்கிரினிங் டூல்ஸ் மற்றும் கோர் பேங்கிங் சிஸ்டம்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Individual, Non Individual Customer Onboarding பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
டாக்குமென்ட் மெயின்டெனன்ஸ், செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், மெடிகேர் கோர்டு, பிறப்பு சான்று, ஃபாரின் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை வெரிபிகேஷன் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் - ஷிப்ட் என்ன?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
அதேபோல் இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக டிரெய்னிங் வழங்கப்படும். அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும்.அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் Cab-யில் சென்று வரலாம். ஆஸ்திரேலியா ஷிப்ட்டில் தான் பணி இருக்கும். இதனால் அதிகாலை 4 மணி முதல் மாலை 3 மணி வரை வேலை இருக்கும்.
மார்ச் 23-24ல் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூர் மார்ச் 23 (நாளை) மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரையும் மார்ச் 24 ( நாளை மறுநாள்) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
இண்டர்வியூ Face to Face முறையில் நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
சோழிங்கநல்லூரில் பணி
இண்டர்வியூவுக்கு செல்வோர் லேப்டாப் எடுத்து செல்ல வேண்டும். ரெஸ்யூம் மற்றும் அரசு அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும். லேப்டாப், பென்டிரைவ் எடுத்து செல்ல அனுமதி கிடையாது பணிக்கு தேர்வாகும் நபர்கள் இண்டர்வியூ நடக்கும் சோழிங்கநல்லூர் அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications