IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ்
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் சி++ டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ மார்ச் 14ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனமாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவை தலைமையிடாக கொண்டு நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது சி++ டெவலப்பர் (C++ Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கான தகுதிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
என்னென்ன தகுதி வேண்டும்?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சி++ டெவலப்பர் பிரிவில் ஓஓபிஎஸ் கான்செப்ட்டில் நன்கு நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் லினக்ஸ் என்விராமென்ட், லினக்ஸில் சி++ தெரிந்திருக்க வேண்டும். லினக்ஸ் இன்டர்னல்ஸ்/Shell ஸ்கிரிப்டிங் தெரிந்திருக்க வேண்டும். ெஷல் ஸ்கிரிப்டிங் தெரிந்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.
பணி அனுபவம் என்ன?
அதேபோல் வின் ஃபார்ம்ஸ்/டபிள்யூபிஎஃப் - சி# அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சி++ டெவலப்பர் பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் என்ன?
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட உள்ளது. இதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பெங்களூரில் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ மார்ச் 14ம் தேதி பெங்களூர் ஜிகனியில் நடைபெற உள்ளது. . பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் சென்னையில் ஐடி வேலையை தேடுவோர் பெங்களூரில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்று பலன் பெறலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications