IT Jobs: நாளை – நாளை மறுநாள்– மே 23 என 3 நாள் சென்னையில் இண்டர்வியூ.. நாவலூரில் பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை (மே 20), நாளை மறுநாள் (மே 21) மற்றும் மே 23 என 3 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
சென்னையில் சோழிங்கநல்லூர் மற்றும் நாவலூரில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது சீனியர் புராசஸ் அசோசியேட் (Senior Process Associate - Bereavement Support) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியை விரும்புவோருக்கு Bereavement பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அக்கவுண்ட் குளோஸ் செய்வதற்கு முன்பாகவே TAPS Sheetதயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். பேலன்ஸ், எக்ஸிக்கியூட்டர் லிமிட்ஸ், கிராண் ஆப் புரோபேட் டாக்குமென்ட் வேலிடேஷன் உள்ளிட்டவற்றை தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்தருக்க வேண்டும். இ-மெயில், கடிதம் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
ஐரோப்பியாவை மையப்படுத்திய வங்கியில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் தெரிந்திருக்க வேண்டும். நிமிடத்துக்கு 25 வார்த்தைகள் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டு முதல் 3 ஆண்டு வரை ereavvement Analyst/Specialist பிரிவில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
UK Shift முறையில் பணி இருக்கும். இதற்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. மே 20 (நாளை), மே 21 (நாளை மறுநாள்) மற்றும் மே 23 என 3 நாட்கள் தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை இ்ண்டர்வியூ நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech - Tower 4, No.602/3/138, Special Economic Zone, Elcot-SeZ, Medavakkam High Road,Sholinganallur, chennai - 600 119 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இண்டர்வியூவுக்கு செல்வோர் அரசு அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications