IT Jobs: அனுபவம் வேண்டாம் - டிகிரி மட்டுமே போதும்.. சென்னை HCL-ல் மே 2ல் இண்டர்வியூ
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வரும் மே 2ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. 2024 முதல் 2026ம் ஆண்டில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Semi Voice Process Freshers பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
கல்வி தகுதி என்ன?
இந்த இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதன்படி கலை மற்றும் அறிவியல் பிரிவில் 2024 முதல் 2026ம் ஆண்டு வரை முடித்தவர்கள் பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பட்ட மேற்படிப்பு என்றால் 2026ம் ஆண்டில் முடித்தவர்களாக இருக்க வேண்டும். அதேவேளையில் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
என்னென்ன திறமைகள் வேண்டும்?
இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. இருப்பினும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில், சாட் சப்போர்ட் வழங்க தெரிந்திருக்க வேண்டும். டிரபிள்சூட் கஸ்டமர் பிராப்ளம்ஸ், சரியான அப்டேட், டேட்டா மேனேஜ்மென்ட் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட வேண்டும். அதேபோல் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும்.
மே 2ம் தேதி இண்டர்வியூ
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ மே 2 (நாளை மறுநாள்) காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூ லொகேஷன்
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூ Face to Face முறையில் நடக்கும். தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து அதன் வழியாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு மே 2ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications