IT JOBS: டிகிரி மட்டும் போதும்.. அனுபவம் வேண்டாம்.. சென்னை - கோவை உள்பட 18 இடங்களில் ஐடி வேலை
சென்னை: ஐபிஎம் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏராளமான காலியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்கள் இந்நிலையில் தான் சென்னை, கோவை, பெங்களூர், கொச்சி உள்பட 18 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஐபிஎம் ஐடி நிறுவனத்தில் தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:

பிஇ- பிடெக்
அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை 2024 அல்லது 2025ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. பிஇ, பிடெக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதனை சார்ந்த துணை படிப்புகள் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
அனுபவம் தேவையில்லை
ஐபிஎம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது Entry Level பணியாகும். இதற்கு அனுபவம் தேவையில்லை. அதேவேளையில் விண்ணப்பம் செய்வோருக்கு 6 சிஜிபிஏ/60% வைத்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், பிழையின்றி எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாவா + பைத்தான்
புரோகிராமிங் லேங்குவேஜ்களான Java, C++, Python, Node.Js உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெவலப்மென்ட் லைப் சைக்கிள் கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
டெக்னிக்கல் ரீதியாக பார்த்தால் வெப் டெவலப்மென்ட்டுக்கான ஸ்கிரிப்டிங் லேங்குவேஜ்களான Roby or Groovy தெரிந்திருக்க வேண்டும். டேட்டா அக்சஸ் பிரேம்வொர்க் தெரிந்திருக்க வேண்டும்.
18 இடங்களில் நியமனம்
எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிர்ஷ்டம் இருப்பின் இங்கு பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.
இதுதவிர பெங்களூர், மைசூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, கொச்சி, புவனேஸ்வர், டெல்லி, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா, குர்கிராம், நொய்டா, விசாகப்பட்டினம்,நவி மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிப்பது எப்படி?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிய விபரம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறித்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம்.
எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். அப்போது இண்டர்வியூ தேதி, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications