10ம் வகுப்பு முடித்தவர்களா நீங்க.. வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையில் வேலை.. அப்ளை பண்ண ரெடியா
வேலூர்: வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர் பணிக்கு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடத்திற்கு தேவையான கல்வி தகுதி மற்றும் சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பணிவிவரம்: உதவியாளர் & கணினி இயக்குபவர்.
கல்வி தகுதிகள்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DCA, PGDCA, சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி இயக்கத்தில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்: இது முற்றிலும் தற்காலிக பணியாகும். இதற்கு மாத ஊதியமாக 11,916 வழங்கப்படும். இந்தப் பணி தொகுப்பூதியம் அடிப்படையிலானது. வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2023 அன்றைய தேதிப்படி 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: மேற்குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை https://Vellore.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணா சாலை (சுற்றுலா மாளிகை எதிரில்)
வேலூர் - 632 011
விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகலை இணைத்து வரும் 05.10.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications