பாங்க் ஆஃப் பரோடாவில் வேலைவாய்ப்பு.. அதுவும் தமிழகத்தில் வேலை.. விண்ணப்பம் உள்ளே
சென்னை : தமிழகத்தில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளம் 25000 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 45வயதிற்குள் இருக்க வேண்டும்.
வங்கி வேலைகளில் சேர்வது என்பது முறையான பயிற்சி உள்ளவர்களுக்கு எளிதானது. அறிவிப்பு வரும் அதை சரியாக பயன்படுத்தியவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
தமிழகத்திலேயே வங்கியில் வேலைவாய்ப்புகள் இப்போது உள்ளது. பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது
வேலை தரும் நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா
வேலையின் பெயர்: Business Correspondent Supervisor
எத்தனை இடங்கள்: 2 காலியிடங்கள்
எத்தனை வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்யலாம் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

ஊதியம்
கல்வித் தகுதி என்ன: M.Sc. (IT) , BE (IT) , MCA , MBA படித்தவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தப்பட்ச கணினி அறிவு இருத்தல் அவசியம். ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பம்;
செய்தியில் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் விண்ணப்பம் உள்ளது. இந்த விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 27-07-2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முகவரி
The Regional Manager Bank of Baroda Puducherry Region Regional Office - Ground Floor 12, R.L. Road, Dugar Towers, Egmore Chennai - 6000 008 முழு விவரங்களுக்கு செய்தியில் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள். தகுதி, வயது வரம்பு, ஊதியம் மற்றும் எப்படி விண்ணப்பிப்பத உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளன.












Click it and Unblock the Notifications