சென்னை வடபழனி முருகன் கோயிலில் வேலை.. மாதம் 25,000 சம்பளம்.. தமிழ் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தமிழ் ஆசிரியர், இசை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றதாகவும், சென்னையில் உள்ள மிக முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில் என்பதால், இந்த கோயிலில் பணியாளர்கள் நியமனம் அறநிலையத்துறையால் செய்யப்படுகிறது.

சென்னை வடபழனி முருகன் கோவில்
அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு காலிப் பணியிடங்களை அறநிலையத்துறை நிரப்புவது வழக்கம். அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 03 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களும் வெளியாகியுள்ளன.
சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் புதியதாகத் தொடங்கப்பட உள்ள ஓதுவார் பயிற்சி பள்ளிக்கு முற்றிலும் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணியிடங்களை நேர்முகத் தேர்வு வாயிலாக நிரப்புவதற்குத் தகுதியுடைய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள், சம்பளம் விவரம்:
1) தேவார ஆசிரியர் - 1 இடம்
* சம்பளம்: மாதம் ரூ.25,000/-
* கல்வித் தகுதி: சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய எந்தவொரு நிறுவனங்களிலும் நடத்தப்படும் மூன்றாண்டு "பன்னிரு திருமுறை" பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப் பாடசாலைகள் வழங்கும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2) இசை ஆசிரியர் - 1 இடம்
* சம்பளம்: மாதம் ரூ.25,000/-
* கல்வித் தகுதி: குரலிசையில் மூன்றாண்டு பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
3) தமிழ் ஆசிரியர் - 1 இடம்
* சம்பளம்: மாதம் ரூ.25,000/-
* கல்வித் தகுதி: தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் இளங்கலைக் கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) பெற்றிருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் மூலமாக www.hrce.tn.gov.in, www.vadapalaniandavar.hrce.tn.gov.in விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 30.09.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தை வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். குறிப்பாக, 30.09.2025க்குப் பிந்தைய தேதியில் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்
வடபழனி, சென்னை - 600 026
(Deputy Commissioner / Executive Officer)
குறிப்பு: இந்த வேலை வாய்ப்பு முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆன்மீக துறையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/136/document_1.pdf












Click it and Unblock the Notifications