செம அறிவிப்பு! எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை.. 50 ஆயிரம் வரை சம்பளம்.. அப்ளை பண்ண ரெடியா
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக அலகில் அரசுத் தரப்பில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக அலகில் அரசுத் தரப்பில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக காணலாம்.

பணியிடங்கள் விவரம்: அலுவலக உதவியாளர் (04 பணியிடங்கள்), இரவுக்காவலர் (01) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மிதி வட்ட ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். இரவு காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்து இருந்தால் போதுமானது.
வயது வரம்பு: 18-வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34-வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியல் வகுப்பினர், பழங்குடியின வகுப்பினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும்.
சம்பளம் எவ்வளவு: அலுவலக உதவியாளர் பணிக்கு ரூபாய் 15,700 - 50,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இரவு காவலர் பணிக்கு மாதம் ரூபாய்15,700 - ரூபாய் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியே விண்ணப்பிக்கலாம்.
https ://dharmapuri.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 21.11.2023-க்குள் வந்து சேரும்படி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆசியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), இரண்டாவது தளம், தருமபுரி - 636 705 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ நேரிலோ விண்ணப்பங்களை அளிக்கலம்.
தேர்வுமுறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications