எய்ம்ஸ் மருத்துவமனையில் 4576 பணியிடங்கள்.. 10ம் வகுப்பு + ஐடிஐ + டிகிரி தகுதி.. தேதி முடிய போகுது
சென்னை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் கணக்காளர், ஆய்வக உதவியாளர் மற்றும் மருத்துவமனை பல்துறை உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் மொத்தம் 4,576 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதனால், தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடவும்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது இந்த மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஜூனியர் கணக்காளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 4,576 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

காலிப் பணியிடங்கள்: ஜூனியர் கணக்காளர், ஆய்வக உதவியாளர், மருத்துவமனை பல்துறை உதவியாளர், இசிஜி டெக்னீஷியன், நூலகர், ஓட்டுனர், வார்டன், பெயிண்டர், யோகா பயிற்சியாளர், செவிலியர், ரேடியோ கிராபி டெக்னிஷியன், டேட்டா ஆப்ரேட்டர், நிர்வாக உதவியாளர், உதவி பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர்கள், உதவி பொறியாளர், இஎன்டி டெக்னீஷியன், எலெட்ரீசியன், வரைவாளர், ஸ்ரோட் கீப்பர், பார்மிஸ்ட், பெயிண்டர், மெக்கானிக், பயோ மெடிக்கல் என்ஜினியர் என மொத்தம் 66 வகையான பிரிவுகளில் காலியாக உள்ள 4,576 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வித் தகுதியானது கேட்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கும் பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பானது பணியின் தன்மைகேற்ப மாறுபடும். 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோர்கள் வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளுக்கு ஏற்றபடி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?: சிபிடி எனப்படும் கணினி வழி ஆன்லைன் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.2,400 திருப்பி வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: கடந்த 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கியது. வரும் 31 ஆம் தேதி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
தேர்வு எப்போது?: விண்ணப்பித்த படிவங்களில், ஏதேனும் திருத்தம் இருப்பின் 12.02.2025 to 14.02.2025 வரை மேற்கொள்ளலாம். தேர்வானது பிப்ரவரி 26 ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://rrp.aiimsexams.ac.in/advertisement/677cd0d849c05cf7ac74271a
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications