மாதம் 2 லட்சம் வரை சம்பளம்.. தமிழக இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை.. சென்னையில் மிகப்பெரிய முகாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்ஜினியர்கள் கடந்த ஆண்டு இணைந்து உருவாக்கிய 'சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றம்' தற்போது 28 நாடுகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு செயல்படுகிறது. இந்த அமைப்பும் 'டான்செம்' அமைப்பின் கீழ் செயல்படும் உலகளாவிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையமும் இணைந்து சென்னையில் வருகிற 12, 13-ந்தேதிகளில் மாநாடு நடத்த உள்ளன. இதில் 13 ஆயிரம் இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் 40 ஆயிரம் முதல் 2லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் இணைந்து கடந்த ஆண்டு 'சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றம்' என்ற அமைப்பை உருவாகினார்கள். இந்த அமைப்பு தற்போது 28 நாடுகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு செயல்படுகிறது.

jobs job abroad Jobs


வேலைவாய்ப்பு

இந்நிலையில் தமிழக இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அயலக தமிழர் நலத்துறையின் முன்னாள் கமிஷனரும், சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் தலைமை ஆலோசகருமான பி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் 'டான்செம்' அமைப்பின் கீழ் செயல்படும் உலகளாவிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் தலைமை நிர்வாக அலுவலர் லி.ஷாநவாஷ்கான் உள்ளிட்டோர் வளைகுடா நாடுகளுக்குச் சென்று சர்வதேச தமிழ் பொறியாளர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

இந்நிலையில் 'உலகளாவிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மைய தலைமை நிர்வாக அலுவலர் லி.ஷாநவாஷ் கான், தலைமை மேலாண் இயக்குநர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும் போது, சென்னை நந்தம்பாக்கத்தில் வருகிற 12, 13-ந் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் சர்வதேச மாநாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணி ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

2 லட்சம் வரை சம்பளம்

ஐ.டி.ஐ. முதல் என்ஜினீயரிங் வரை படித்த பட்டதாரிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வந்திருக்கிறது. பல்வேறு ஒப்பந்தத்தால் 13 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளன. மாதம் ரூ.40 ஆயிரத்திலிருந்து, ரூ.2 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். தமிழக இளைஞர்கள் தங்களுடைய சுய விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்' என்று கூறினார்கள்.

அருமையான வாய்ப்பு

வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்கள் இந்த [email protected] என்ற இமெயிலுக்கு அனுப்பலாம். வரும் செப்டம்பர் 12, 13-ந் தேதிகளில் நடைபெறும் முகாமில் பங்கேற்று தகுதியான வேலைவாய்ப்பை பெற முடியும். நல்ல சம்பளத்தில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற விரும்புவோருக்கு இது அருமையான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+