திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வேலை பார்க்க ஆசையா? 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. மாதம் 80 ஆயிரம் சம்பளம்
சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், அதன் உபகோயில்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், கூர்க்கா, கால்நடை பராமரிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
இளநிலை உதவியாளர்: 10 - பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்
கூர்க்கா: 02 பணியிடங்கள்- தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
திருவலகு: 04: தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்பாளர்: 02- தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்
பெரிய சன்னதி உடல்: 01- தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்: அதுபோக யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் இருந்து இது தொடர்பாக சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
பெரிய சன்னதி வீரவண்டி: 01
பெரிய சன்னதி சோமக்கலம் மற்றும் இதர வைத்தியங்கள்: 01
தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வைத்தியங்கள்: 01
உதவி யானைப்பாகன்கள்: 02- தமிழில் எழுதபடிக்க தெரிந்து இருக்க வேண்டும். யானையை கட்டுப்படுத்தி வழிநடத்தும் திறன் அவசியம்
சலவையாளர்: 01-
கூட்டுபவர்: 06
இந்த பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்
சம்பளம்:
இளநிலை உதவியாளர்; ரூ.18,500-58,600
கூர்கா: ரூ.15,900- 80,400
யானை பாகன்கள், கூட்டுபவர்: ரூ.11,600-36,800
விண்ணப்பிப்பது எப்படி?
25.11.2025 ந்தேதி மாலை 5.00 மணிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாளில் /நேரத்தில் தனது சொந்த செலவில் / பொறுப்பில் அனைத்து அசல் சான்றுகளுடனும் ஆஜராக வேண்டும். எவ்வித காலதாமதமோ / காரணங்களோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் "------பணியிடத்திற்கான விண்ணப்பம்"" என தெளிவாக குறிப்பிட்டு "இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620006." என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும், அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.












Click it and Unblock the Notifications