அரசு வேலையில் சேர விரும்புவோருக்கு குட்நியூஸ்.. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அட்டவணையில் மாற்றம் !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023ம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட தேர்வு கால அட்டவணை பட்டியலை வெளியிட்டுள்ளது.
சென்னை: அரசு வேலையில் சேர விரும்புவோர் இந்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் கால அட்டவணையை அறிந்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023ம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட தேர்வு கால அட்டவணை பட்டியலை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி என சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடத்துகிறது. போட்டித்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளாகிறார்கள்.
எனவே அரசு பணியில் சேர விரும்புவோருக்கு போட்டித்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச கால அட்டவணை மிகவும் முக்கியமாகும்.

32 வகை பதிவகள்
ஏனெனில் எந்தந்த பணிகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளது. அறிவிப்பு எப்போது வரும், எழுத்து தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து உத்தேச அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வகையில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, ஆண்டு தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதில், 32 வகை பதவிகளுக்கான போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டன.

சுற்றுலாத்துறை அதிகாரி
இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டுள்ளது.இதில், வேளாண் அதிகாரி மற்றும் உதவி இயக்குனர், சுற்றுலாத் துறை அதிகாரி, ஒருங்கிணைந்த நூலக சேவை பணி, உதவி ஜெயிலர், போக்குவரத்து கழக உதவி மேலாளர், நகரமைப்பு துறை ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கான தேர்வுகளில், மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.மேலும் பல பணிகளுக்கான தேர்வுகள் குறித்த, தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

கவுன்சிலிங்
உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் எழுத்து தேர்வு முடிவு ஆகஸ்டில் வரும் என்றும் கவுன்சிலங் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அதிகாரி பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்பட்டு அக்டோபரில் கவுன்சிலங் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருப் 1 தேர்வு
இதேபோல் குரூப் 1 தேர்வு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நவம்பர் மாதம் முதல்நிலை தேர்வு நடைபெறும் என்றும், ஜூலை 2024 இல் மெயின் தேர்வு நடைபெறும் என்றும் கவுன்சிலிங் 2024 டிசம்பரில் நடைபெறும் என்றும் உத்தேசபட்டிய வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும், காலிபணியிடங்கள் விவரமும் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 32 வகையான தேர்வுகள் நடைபெற உள்ளது. முழு பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications