மருதமலை முருகன் கோவிலில் வேலை.. 8, 10ம் வகுப்பு கல்வித்தகுதி.. 58,000 வரை சம்பளம்! தேதி முடிய போகுது
சென்னை: மருதமலை முருகன் கோயிலில் அலுவலக உதவியாளர், டிரைவர் என 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 5 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோயில். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியின், அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் இந்த மருதமலை முருகன் இருந்து வருகிறது. இந்த கோயிலில் அலுவலக உதவியாளர், பிளம்பர், டிக்கெட் சேல்ஸ் கிளர்க், ஹாஸ்டல் கண்காணிப்பாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகியது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.

பணியிடங்கள் விவரம்: டிக்கெட் விற்பனை எழித்தாளர் (01 பணியிடம் ), அலுவலக உதவியளார் (02), ஓட்டுநர் (05), பிளம்பர் கம் பம்ப் ஆபரேட்டர் (01), காவலர் (04), திருவலகு (02), விடுதி காப்பாளர் (01), பல வேலை (01), மினி பஸ் கிளீனர் (01) என 19 பணியிடஙக்ள் நிரப்பப்படுகின்றன. அதுபோக உப கோயிலான கரிவதரதராஜ திருக்கோயில், வடவள்ளி கோயிலில் ஒரு காவலர் பணியிடம் மற்றும் ஒரு திருவலகு பணியிடம் நிரப்பப்படுகின்றன. மொத்தமாக 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு & சம்பளம்: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் அவசியம். சம்பளம் பணியின் தன்மைகேற்க மாறுபடும். அதிகபட்சமாக மாதம் ரூ.58,600 வரை வழங்கப்படுகிறது.
கல்வி தகுதி:
* டிக்கெட் விற்பனை எழுத்தாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
* அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
* டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியுடன் இலகு ரக ஒட்டுர் உரிமம் அவசியம். முதலுதவி சான்றிதழ் அவசியம். ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* பிளம் ஆபரேட்டர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குழாய் தொழில்/ குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும். தொழில் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஐந்து வருடம் அல்லது இரண்டு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* மின் உதவியாளர் பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் பணியாளர், தொழில் பயிற்சி நிறுவனர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து 'H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* மினி பஸ் கிளீனர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி போதும். மோட்டார் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதர பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். www.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணைய தளத்தில் இருந்து இலவசமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை அனுப்ப வேண்டிய முகவரி துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம்-641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 05.04.2023 ஆகும். இன்னும் 2 நாட்கள் தான் இருப்பதால் இந்த பணியிடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளவும். https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவம் மற்றும் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும்.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications