கோவை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி தான்.. ரூ.57 ஆயிரம் சம்பளம்!
சென்னை: கோவையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் காலியாக உள்ள கேண்டீன் உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட இந்த பணியிடத்திற்கு மாதம் ரூ.57ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட இதர விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சிஜிஎஸ்டி & மத்திய கலால் வரி ஆணையரகம் கோவையில் உள்ளது. கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலகம் ஜிஎஸ்டி வரி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள 3 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: கேண்டீன் உதவியாளர் பணி - 03 பணியிடங்கள்.
கல்வித் தகுதி: கவ்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18- வயது நிரம்பியவர்களும் 25 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். அதாவது எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் என்றால் 30 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 28 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: கேண்டீன் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ. 18,000 - Rs.56,900/ வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. ஆப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ் நகல்களுடன் கீழ்காணும் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தினை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Additional Commissioner of GST & Central Excise (P&V),
O/o the Principal Commissioner of GST & Central Excise",
Coimbatore GST Commissionerate,
No. 6/7, A.T.D. Street, Race Course, Coimbatore - 641018
விண்ணப்பங்களை அனுப்ப 17.03.2025 கடைசி நாளாகும். அதற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்கும் கவரில் எந்த பணியிடத்திற்கு விண்ணபிக்கிறோம் என்பதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://gstchennai.gov.in/images/pdf/tenders/Recruitment_Canteen%20Staff_Coimbatore.pdf
-
IT JOBS: அனுபவம் தேவையில்லை.. சென்னை எச்சிஎல்-லில் மார்ச் 20ல் இண்டர்வியூ.. சோழிங்கநல்லூரில் பணி -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
மத்திய ஆயுத காவல் படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. 69 ஆயிரம் வரை சம்பளம்.. செம சான்ஸ்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications