ரூ.71000 சம்பளம்.. சொந்த ஊரில் நீதிமன்றங்களில் வேலை.. மீண்டும் ஹைகோர்ட் அறிவித்த சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 26-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு நிரப்புதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி இருந்தது.

Jobs court job high court

நீதித்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, அலுவலக உதவியாளர் முதல் தூய்மை பணியாளர் வரை மொத்தம் உள்ள 2323 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

பணியிடங்கள் விவரம்: அலுவலக உதவியாளர்: 638, காவலர் /இரவுக்காவலர்: 459, மசால்ஜி (பன்முக உதவியாளர்): 402, இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்: 242, தூய்மை பணியாளர்: 202

முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்: 100
டிரைவர்: 27
தூய்மை பணியாளர்: 202
என 17 வகையான பணிகளில் மொத்தம் 2,323 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். டூவீலர், கார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

டிரைவர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம். தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், வாட்ச்மேன், மசால்ஜி உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழில் எழுதபடிக்க தெரிந்து இருந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வயது வரம்பு, சம்பளம்: வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2024 தேதிப்படி 18 வயது பூர்த்தியானவர்களும் 32 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்றும் அதிகபட்சமாக 71,900 வரை ஊதியம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 27.05.2024 கடைசி நாள் என்று கூறப்பட்டது. மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login இணையதளத்தில் அறியலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பிக்க காலஅவகாசம் வரும் ஜூன் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளரான ஜெ.செல்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு நடத்தும் பொருட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று சென்னை ஐகோர்ட்டு நீதித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிப்பாணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இந்த பதவிகளுக்கான இணையதள விண்ணப்பத்தை பதிவு செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் வருகிற 26-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இதுவரையிலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காத தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 26-ந்தேதி நள்ளிரவு 11.59 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்தியன் வங்கி மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியும் வரும் 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முழுமையடையாத விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவர்கள், அதே பயனாளர் குறியீட்டைப் பயன்படுத்தி அந்த விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+