சென்னை ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை! ஐடிஐ தகுதி தான்.. 21 ஆயிரம் சம்பளம்! விட்றாதீங்க
சென்னை: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் வரும் சென்னை ஆவடியில் உள்ள தொழிற்சாலையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் டெக்ன்ஷியன், கார்பெண்டர், எலக்ட்ரிஷியன் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் மொத்தம் 1,850 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணபிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.
சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான கனரக ஆயுத தொழிற்சாலை உள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்ப்பாட்டின் கீழ் வரும் இந்த தொழிற்சாலையில், இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவையான கவச வாகனங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம், கல்வித் தகுதி:
1965 ஆம் ஆண்டு ஆவடியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 1,850 ஜூனியர் டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
ஜூனியர் டெக்ன்ஷியன், கார்பெண்டர், எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், மெக்கானிஸ்ட், வெல்டர், பெயிண்டர் என 20 வகையான பணிகளில் மொத்தம் 1,850 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதாவது ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் முதலில் நிரப்படும். இந்த ஒப்பந்தங்கள் மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கப்படும். கல்வி தகுதியை பொறுத்தவரை துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
அனைத்து பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுக்ளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.21,000 சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு துறை சார்ந்த பிரிவு பணியிடங்களுக்கு ஏற்ற செய்முறை தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி / எஸ்டி, பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 19.07.2025 கடைசி நாளாகும். ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது, பத்தாம் வகுப்பு சான்றிதழ், அப்ரெண்டீஸ் பயிற்சி பெற்ற சான்றிதழ், சாதி சான்றிதழ், அனுபவம் இருந்தால் அதற்கான சான்றிதழ், வங்கி பாஸ் புக், ஆதார் கார்டு, பான் கார்டு டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றின் ஒளிநகலையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://oftr.formflix.org/
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications