Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐடிபிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடிச்சவங்க விண்ணப்பிக்கலாம்! இன்றே கடைசி நாள்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐடிஐபி வங்கியில் காலியாக உள்ள 1000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால் உடனடியாக விண்ணப்பித்து விடுங்கள்.


நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் பொதுத்துறை வங்கி ஐடிபிஐ. மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாகவும் நேரடியாகவும் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி நாள் ஆகும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

job employment idbi bank


பணியிடங்கள்; எக்ஸ்கியூட்டிவ் சேல்ஸ் மற்றும் ஆபரேசன்ஸ் (ESO) - 1000 பணியிடங்கள். பொதுப்பிரிவினருக்கு 448 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 94: எஸ்.சி: 127, ஒபிசி: 231, EWS:100: மாற்றுத்திறனாளிகள்: 40 என மொத்தம் ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.


வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் , பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுக்ள் அளிக்கப்படுகிறது.

சம்பளம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இரண்டு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். முதல் ஆண்டில் ரூ.29 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கப்படும். இரண்டாவது ஆண்டில் ரூ.31 ஆயிரம் வழங்கப்படும். டிஏ உள்பட இதர சலுகைகள் எதுவும் கிடைக்காது.


விண்ணப்பிக்கும் முறை:
எக்ஸ்கியூட்டிவ் சேல்ஸ் மற்றும் ஆபரேசன்ஸ் பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ. 1050/- செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர் ரூ. 250 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். http://www.idbibank. என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 16.11.2024. இன்று ஒருநாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மறக்காமல் விண்ணப்பித்து விடுங்கள்.


தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, நாகர்கோவில், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பாணையை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.idbibank.in/pdf/careers/ESO-2025-26.pdf

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+