பிளஸ் 2 முடித்தால் போதும்! ரயில்வே கொடுத்த பொன்னான வாய்ப்பு.. 2 நாள்தான் டைம் இருக்கு! மறந்துடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரயில்வேயில் என்டிபிசி தொழில் நுட்பம் சாராத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே அவகாசம் உள்ளது. எனவே, தகுதியும் ஆர்வமும் இருந்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்துவிடுங்கள்.

ரயில்வேயில் வேலைக்கு சேர வேண்டும் என்பது வேலை தேடும் இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம், சலுகைகள் ஆகியவை கிடைக்கும் என்பதால் ரயில்வேயில் எப்படியாவது வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்று பல லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வருகிறார்கள். ரயில்வேயில் காலிப்பணியிடங்களை பொறுத்தவரை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக நிரப்பப்படுகிறது.

job railway jobs rrb

அவ்வப்போது காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ரயில்வே அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வு மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், என்.டி.பி.சி எனப்படும் தொழில் நுட்பம் சாராத பணியிடங்கள் (12 ஆம் வகுப்பு தகுதி) நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. கமெர்ஷியல் டிக்கெட் கிளர்க் - 2022 பணியிடங்கள்
2. அக்கவுண்ட்ஸ் கிளர்க் - 361
3. ஜூனியர் கிளர்க் டைப்பிஸ்ட் - 900
4. டிரெயின்ஸ் கிளர்க் - 72
என மொத்தம் 3,445 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி & வயது வரம்பு: மேற்கூறிய 4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 18 - 33 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்டி பிரிவினராக இருந்தால் 38 வயது வரையும், ஒபிசி பிரிவினராக இருந்தால் 36 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு?: கமெர்ஷியல் டிக்கெட் கிளர்க் பணியிடத்திற்கு ரூ.21,700 (லெவல் 3) ஆரம்ப சம்பளமாக வழங்கப்படும். இதுபோக அரசு விதிகளின் படி அனைத்து சலுகைகளும் உண்டு. இதர மூன்று பணியிடங்களுக்கும் ஆரம்ப சம்பளமாக ரூ.19,900 கிடைக்கும்.

தேர்வு முறை: கணினி வழியிலான தேர்வு நடைபெறும். சிபிடி என சொல்லப்படும் இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். டைப்பிங் திறன் டெஸ்ட் உள்ளிட்டவையும் வைக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப் கட்டணம் ரூ.500 ஆகும். ஸ்டேஜ் 1 கணினி வழியிலான தேர்வு எழுதிய பிறகு ரூ.100 பிடித்தம் போக 400 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். இவர்களுக்கு முழு கட்டணமும் ஸ்டேஜ் 1 தேர்வு எழுதிய பிறகு திருப்பி அளிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 27.10.2024 தான் கடைசி நாள் ஆகும். இன்னும் இரண்டு நாள்தான் அவகாசம் இருப்பதால் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.. தேர்வு அறிவிப்பினை படிக்கவும் விண்ணப்பிக்கவும் இந்த லிங்கை கிளிக் https://www.rrbchennai.gov.in/ செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+