ஐஓசியில் வேலை.. 1,720 பணியிடங்கள்.. ஐடிஐ, டிகிரி முடிச்சவங்க விண்ணப்பிக்கலாம்.. ரெடியா
சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 1,720 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன, பணியிடங்கள் குறித்த விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். ஐ.ஓ.சி எனப்படும் இந்த நிறுவனத்தில் 1,720 அப்ரெண்டிஸ் டிரெயினிகளுக்கான அழைப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி பணியிடங்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரம், ஒப்பந்த காலம் உள்ளிட்ட முழு விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், அக்கவுண்டண்ட், டேடா எண்ட்ரி ஆபரேட்டர் உள்பட 11 வகையான பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. மொத்த பயிற்சி பணியிடங்களின் எண்ணிக்கை 1,720 ஆகும். கல்வி தகுதியை பொறுத்தவரை பி.எஸ்.சி ( கணக்கு, இயற்பியல், வேதியியல்) பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
செக்ரட்டேரியல் அஸ்சிஸ்டண்ட் பணியிடத்திற்கு பி.ஏ/பி.எஸ்.சி/பி.காம் ஆகிய பிரிவுகளில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்கவுண்ட் பணிக்கு பிகாம் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். டேடா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். அதுபோக ஐடிஐ முடித்தவர்களுக்கான பணியும் உள்ளது.
துறை சார்ந்த படிப்புகள் கேட்கப்பட்டுள்ளன. கல்வி தகுதி, பணியிடங்கள் குறித்த முழு விவரத்தை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பாணை லிங்க் மூலமாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 18 வயது நிரம்பியவர்களும் 24 வயது நிறைவடையாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் ஒப்பந்த காலம் ஒரு ஆண்டு மட்டுமே ஆகும்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 20.11.2023 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://iocl.com/admin/img/Apprenticeships/Files/4f093a99480a42328c322a1a214fce08.pdf கிளிக் செய்யவும்.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் ஆபீசர் வேலை.. 40 ஆயிரம் சம்பளம்! டிகிரி முடிச்சவங்க தட்டி தூக்கலாம் -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications