இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை.. 400 பணியிடங்கள்.. ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள 400 நான் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், எண்ணெய் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய அரசு பொதுத்துறை நிறுவனமாகவும் உள்ளது. அதிக லாபம் ஈட்டும் அரசு நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும்.

இந்த நிலையில், தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் காலியாக இருக்கும் நான் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. ஜூனியர் இன்ஜினியரிங் உதவியாளர் - 198 பணியிடங்கள்
2. இளைய பொறியியல் உதவியாளர் - 33
3. இளநிலை பொறியியல் உதவியாளர் - 22
4. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்) / ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 25
5. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட்- (மெக்கானிக்கல்) / ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 50
6. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட்(இன்ஸ்ட்ரூமென்டேஷன்) / ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் -24 பதவிகள்
7. ஜூனியர் தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் - 21 பணியிடங்கள்
8. ஜூனியர் இன்ஜினியரிங் உதவியாளர் - 27
9. பொறியியல் உதவியாளர் (மின்சாரம்) -15
10. பொறியியல் உதவியாளர் (மெக்கானிக்கல்) - 08
11. பொறியியல் உதவியாளர் (T&I) -15
12. தொழில்நுட்ப உதவியாளர் - 29 பணியிடங்கள் என மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஐடிஐ, டிப்ளமோ, பி.எஸ்.சி பட்டதாரிகள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் தன்மைகேற்ப துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ பிரிவுகளை எடுத்து படித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்..
வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 26 - வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ. 25,000 - 1,05,000 -வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: கணினி வழி தகுதி தேர்வு, திறந்தேர்வு, உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறது. நாடுமுழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். சென்னையிலும் தேர்வு மையம் உண்டு. விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை எஸ்.சி/எஸ்.சி/ முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. இதர பிரிவினருக்கு ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 20.07.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2024. தேர்வு அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க https://iocl.com/latest-job-opening இந்த இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் பார்வையிடவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications