அறநிலையத்துறை வேலை.. சென்னையில் உள்ள கோவிலில் பணியிடம்! 48 ஆயிரம் சம்பளம்.. விட்றாதீங்க
சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள அருள்மிகு மார்கசகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காவலாளி உள்பட 7 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? கல்வி தகுதி என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்தறை கோவில் நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை மதுரவாயலில் உள்ள அருள்மிகு மார்கசகாய ஈஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்..

பணியிடங்கள் & சம்பளம்:
சுயம்பாகி: 01 - ரூ. 13,200 - 41,800 வரை சம்பளம்
மேளக்குழு: 01 - ரூ.15,300 - 48,700
பகல் காவலாளி: 01 - ரூ.11,600 - 36,800
இரவு காவலர்: 01 - ரூ.11,600 - 36,800
இரவு காவலர்: 01- ரூ.11,600 - 36,800
(வரசித்தி விநாயகர் திருக்கோயில்)
திருவலகு: 02 - ரூ.10,000 - 31,500
கல்வி தகுதி: தமிழிலில் நன்கு எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். மேலும் சுயம்பாகி பணியிடத்திற்கு திருக்கோயில் பழக்க வழக்கத்தின் படி தினசரி விழாக்காலங்களில் பிரசாதம் தயாரிக்க தெரிந்து இருக்க வேண்டும். திருக்கோயில்களின் பூஜை முறைகளை பற்றி தெரிந்தவராக இருக்க வேண்டும். மேளக் குழுவிற்கு அரசு அல்லடு மத நிறுவனங்கள், பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து உரிய சான்று பெற்றிருக்க வேண்டும். இதர விவரங்களை திருக்கோயில் அலுவலக நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிப்பது எப்படி?: அனைத்து பணியிடங்களுக்கும் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை கோயில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலேயே சமர்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 27.11.2024 கடைசி நாள் ஆகும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள:
https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=208
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications