இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை.. 12 ஆம் வகுப்பு முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுசக்தி கழகத்தில் ( NPCIL) பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு சம்பளம் எவ்வளவு, எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்திய அணுசக்தி கழகம் என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் நாட்டின் அணுமின் நிலைய திட்டங்களை மேற்கொள்ளும் பணியினை செய்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த அணுசக்தி கழகத்தின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் என்பதால், இங்கு பணியாற்றுபவர்களுக்கு கைநிறைய சம்பளம், சலுகைகள் என எக்கச்சக்க வசதிகள் அளிக்கப்படும்.

அணுசக்தி கழகத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படும். அந்த வகையில் தற்போது 267 Stipendiary Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வாகுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சியுடன் உதவி தொகை அளிக்கப்படும். அதன்பிறகு வழக்கமான ஊதியம் அளிக்கப்படும். இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. ஸ்டைபண்டரி டிரெய்னி ஆபரேட்டர் - 152 பணியிடங்கள்
2. ஸ்டைபண்டரி டிரெய்னி (ST/TN) பராமரிப்பாளர் - 115 பணியிடங்கள்
என மொத்தம் 267 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: ஆபரேட்டர் பணியிடத்திற்கு 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி போதுமானது. இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை கொண்ட முதல் பிரிவை 12 ஆம் வகுப்பில் படித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
பராமரிப்பாளர் பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் சயின்ஸ் பாடத்தில் குறைந்தது 50 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரிஷியன்/ஃபிட்டர்/ வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். படிப்பை முடித்த பிறகு ஒராண்டு பணி அனுபவம் விண்ணப்பதாரர்களுக்கு இருப்பது அவசியம்.
சம்பளம் & வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை முதலாம் ஆண்டு மாதம் 20 ஆயிரமும் இரண்டாம் ஆண்டு 22 ஆயிரமும் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு மாதம் ரூ.32,500 சம்பளமாக அளிக்கப்படும்.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு ( முதன்மை தேர்வு + அட்வான்ஸ் தேர்வு) என இருகட்ட எழுத்து தேர்வுகளும் உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க வரும் 11.09.2024 கடைசி நாளாகும். விண்ணப்பிக்க அவகாசம் வரும் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தேர்வு செய்யப்படுவர்களுக்கான ஊதிய விவரம், பணிக்காலம் ஆகியவை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளலாம்.. தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://www.npcilcareers.co.in/MainSiten/DefaultInfo.aspx செய்யவும்.
-
IT Jobs: டிகிரி முடித்தவரா? நாளை மதியம் சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL -
IIT Madras: சென்னை ஐஐடியில் வேலை.. ஆசிரியர் பணியிடங்கள்.. ஒரு லட்சம் வரை சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -
Federal Bank: ஃபெடரல் வங்கியில் வேலை பார்க்க ஆசையா? டிகிரி முடித்திருந்தால் போதும்.. செம சான்ஸ்! விட்றாதீங்க -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்












Click it and Unblock the Notifications