பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.. லட்சத்தில் சம்பளம்.. யார் யார் விண்ணப்பிக்க முடியும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 38 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் செயல்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனம் மின்சாரம் பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. பவர் கிரிட் பொதுத்துறை நிறுவனத்தில் அவ்வப்போது காலியாக உள்ள பணியிடங்கள் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படும்.

employment job jobs

அந்த வகையில் தற்போது, 38 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் என்ஜினியர் - 15 பணியிடங்கள்
சர்வேயர் - 15
வரைவாளர் (Draughtsman) - 08
என மொத்தம் 38 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: ஜூனியர் என்ஜினியர் ( சர்வே என்ஜியனிரிங்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சர்வே என்ஜினியரிங் பாடப்பிரிவை கொண்ட டிப்ளமோ படித்து முடித்து இருக்க வேண்டும். 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். 4 ஆண்டுகள் பணி அனுபவமும் அவசியம். சர்வேயர் பணிக்கு இரண்டு ஆண்டுகள் கொண்ட ஐடிஐ (சர்வேயர்) முடித்து இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வரைவாளர் பணிக்கு துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படிப்பு முடித்து இருக்க வேண்டும். பணி அனுபவமும் அவசியம். கல்வி தகுதியை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் விவரமாக படித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வயது வரம்பு: ஜூனியர் என்ஜினியர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 31 ஆகும். சர்வேயர் பணிக்கு 32 வயதும் வரைவாளர் பணிக்கு 32 வயதும் அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?:
ஜூனியர் என்ஜினியர்: 26,000 - 1,18,000
சர்வேயர்: 22,000 - 85,000
வரைவாளர்: 22,000 - 85,000

தேர்வு முறை: கணினி வழி தேர்வு, திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னையில் தேர்வு நடைபெறும். தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க வரும் 29.08.2024 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.powergrid.in/sites/default/files/inline-files/Detailed_Advertisement_Surv_Engg_Suveyor_Draughtsman.pdf இந்த லிங்கை கிளிக் செய்வும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+