தெற்கு ரயில்வேயில் வேலை.. கோவை, சென்னை, மதுரையில் பணியிடம்! அருமையான வாய்ப்பு.. ரெடியா?
சென்னை: தெற்கு ரயில்வேயில் (Southern Railway)வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,518 அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சென்னை மற்றும் மதுரையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியன் ரயில்வே நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக உள்ளது. பல லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றக்கூடிய ரயில்வே துறையில் இணைந்து பணி செய்ய வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் லட்சியமாக உள்ளது.

இந்தியன் ரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வாயிலாக நிரப்பப்படுகிறது. அது போக அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
கேரேஜ் & வேகன் வேலைகள், பெரம்பூர் - 1,394 பணியிடங்கள்
செண்ட்ரல் பணிமனை: கோல்டன் ராக் - 857 பணியிடம்
சிக்னல் மற்றும் டெலிகாம் வொர்க்ஷாப் யூனிட்ஸ் போதனூர் - 1,267 பணியிடம்
என மொத்தம் 3,518 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வி தகுதி மாறுபடும். ஃபிட்டர், பெயிண்டர் & வெல்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும்.
மெடிக்கல் லேப்டரட்டரி டெக்னிஷியன் (ரேடியோலாஜி, பதோலாஜி, கார்டியாலஜி) பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 50 சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். 10, +2 முறையில் படித்து இருக்க வேண்டும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்து இருக்க வேண்டும். எலக்ட்ரிஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். தேர்வர்கள் கல்வி தகுதி பற்றிய விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளவும்.
சம்பளம் எவ்வளவு:
பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பயிற்சி பணியிடங்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகையாக அளிக்கப்படும். 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வி தகுதி பணியிடங்களுக்கு மாதம் ரூ.7ஆயிரம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் 1 ஆண்டு 3 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும்.
வயது வரம்பை பொறுத்தவரை 15 வயது முடிந்தவர்களும் 24 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க வரும் 25.09.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications