ரூபாய் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை.. 1 லட்ச ரூபாய்க்கும் மேல் சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: டெல்லியில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தது ரூ50,000 முதல் 1,60,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம் எனப்படும் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் நிறுவனம் தலைநகர் டெல்லியில் உள்ளது. மத்திய அரசின் நிதி அமைச்சகம் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. டெல்லியில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
துணை (Debuty) மேனேஜர் (IT) - Application Developer - 2
துணை மேனேஜர் (IT) Cyber Security - 1
துணை மேனேஜர் (IT) Open Source Application Developer - 1
உதவி மேனேஜர் (F&A)-10
உதவி மேனேஜர் (HR)-6
உதவி மேனேஜர் (Materials Management)-1
உதவி மேனேஜர் (IT)-1
உதவி மேனேஜர் (Legal)-1
என மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
* துணை மேனேஜர் (Debuty Manager) பதவிக்கு துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் B.E./B.Tech பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவமும் அவசியம்.
* உதவி மேனேஜர் பதவிக்கு துறை சார்ந்த பாடப்பிரிவு எடுத்து பொறியியல்/ இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக உதவி மேனேஜர் லீகல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை சட்டம் பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?:
டெபியூட்டி மேனேஜர்: ரூ.50,000 - ரூ.1,60,000 வரை
உதவி மேனேஜர்: ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வை பொருத்தவரை டெல்லி, நொய்டா, குருகிராம், ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, போபால் ஆகிய நகரங்களில் நடைபெறும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது தேர்வு மைய ஆப்ஷனை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். தேர்வு மையம் ஒதுக்கிய பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 24.11.2024 கடைசி நாள் ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.spmcil.com/en/ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications