கணக்கிற்கு போன ரூ.3000.. பல லட்சம் பேருக்கு அடித்த ஜாக்பாட்.. அரசே அனுப்பிய பணம்! எப்படி பெறுவது?
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) ஜூலை மாதத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ₹3,000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்தத் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்கு, அவர்களின் நிறுவனம் சார்பாக EPFO கணக்கு தொடங்கப்படும். தொழிலாளர் அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் EPFO கிட்டத்தட்ட 13 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் புதிய உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

ஜூலை மாதம் இணைந்த உறுப்பினர்கள்
தொழில் உற்பத்தித் துறையில் முதல் முறையாக வேலைக்குச் சேரும் ஊழியர்களின் முதல் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும். மேலும், அனைத்து துறைகளிலும் புதிதாகப் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு, வைப்பு நிதி சந்தாவில் ₹3,000 வரை அரசு வழங்கும்.
EPFO-வில் பதிவுசெய்து முதல் முறையாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒரு மாதச் சம்பளத்தை மத்திய அரசு மூன்று தவணைகளில் அவர்களின் EPFO கணக்கில் செலுத்தும். இதன் மூலம் அதிகபட்சமாக ₹15,000 வரை மத்திய அரசு செலுத்தும். இதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ₹1 லட்சம் சம்பளமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அனுப்பிய ₹3,000
அதன்படி, ஜூலை மாதத்தில் EPFO-வில் இணைந்த 13 லட்சம் உறுப்பினர்களுக்கு, குறைந்தபட்சம் ₹3,000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்தத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்குச் செல்லாமல், பிஎஃப் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPFO-வில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இனி பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எளிதாக எடுக்க முடியும். தற்போதுள்ள சிக்கலான முறையைத் தவிர்த்து, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
EPFO 3.0 திட்டம்
PAN 2.0 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு தற்போது EPFO 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. தற்போது பிஎஃப் பணம் எடுப்பது கடினமாக இருப்பதால், அதை மாற்றியமைத்து சந்தாதாரர்கள் நேரடியாக ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் தொகையைப் பெறும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் எடுப்பதற்கு வசதியாக அட்டைகளை வழங்கும் பணியிலும் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இந்த வசதி மே-ஜூன் 2025-க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அட்டைகளை ஏடிஎம் கார்டுகள் போல பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். இந்த அட்டைகள் பயனாளியின் தொலைபேசி மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், தற்போது பிஎஃப்-க்கான ஊழியர் பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளது. இந்த வரம்பு நீக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஊழியரின் தனிப்பட்ட சேமிப்புப் பழக்கங்களுக்கு ஏற்ப வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு மாற்றப்படலாம். அதாவது, ஊழியர்கள் தங்கள் பங்களிப்பை அதிகரிக்கலாம். தற்போது ₹1,800 செலுத்துபவர்கள் தேவைப்பட்டால் கூடுதலாகச் செலுத்தலாம். இதன் மூலம் பிஎஃப் தொகைக்கு நீங்கள் கூடுதலாகப் பணம் கட்ட முடியும்.











Click it and Unblock the Notifications