சான்ஸை விட்றாதீங்க.. போஸ்ட் ஆபிசில் 44,228 பணியிடங்கள்! 10ம் வகுப்பு தகுதிதான்! நாளை தான் கடைசி நாள்
டெல்லி: இந்திய தபால் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 44,228 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,789 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
இந்திய தபால் துறை, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தபால் துறையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். மத்திய அரசு பணி என்பதால், கை நிறைய சம்பளம், இதர சலுகைகள் உள்ளது என்பதால் தபால் துறையில் வெளியாகும் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வேலை தேடும் இளைஞர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

தபால் துறையை பொறுத்தவரை GDS எனப்படும் பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் இன்றி பத்தாம் வகுப்பு மார்க் அடிப்படையிலே பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி சுமார் 44,228 ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தபால் துறை வெளியிட்டது. இதற்கு வயது வரம்பு எவ்வளவு, விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள்: நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 44,228 ஆகும். தமிழ்நாட்டில் மட்டும் 3879 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் இடத்திற்கான உள்ளூர் மொழி படித்திருக்க வேண்டும். கணிணி பற்றிய அடிப்படை அறிவு அவசியம். சைக்கிள் ஒட்ட தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தியானவர்களும் 40 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் இருக்கின்றன. எஸ்சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு உண்டு. இது பற்றிய விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?: Branch Post Master பணிக்கு 12,000 - 29,380 வரை சம்பளமாக வழங்கப்படும்.
ABPM/DakSevak- பணிக்கு 10,000/ - Rs.24470/- வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பெண்கள், எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு. பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 15.07.2024, விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.08.2024 ஆகும்.
தேர்வு முறை: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த காலிப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் அதாவது மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆகவே, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://indiapostgdsonline.gov.in/ இங்கே கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications